அமெரிக்காவில் ஆற்றில் மூழ்கிய குழந்தைகளை உயிரைக்கொடுத்து காப்பாற்றிய வாலிபர்!

அமெரிக்காவில் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த இருந்த 3 சிறுவர்களை காப்பாற்ற முயன்ற வாலிபர் குழந்தைகளை காப்பாற்றிவிட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணம் பெர்ஷ்னோ நகரில் வசித்து வந்தவர் மன்ஜித் சிங். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தகம் செய்வதற்காக அமெரிக்கா சென்றார். மன்ஜித் நீச்சல் செய்வதற்காக கிங்ஸ் ஆற்றுக்கு சென்றபோதுதான் இந்த சோக சம்பவம் நடந்தது.

boy

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கிங்ஸ் ஆற்றுக்கு தனது உறவுக்காரர் மற்றும் நண்பர்கள் உடன் மன்ஜித் சென்றார். அப்போது 2 சிறுமிகளும், ஒரு சிறுவனும் ஆற்றில் தத்தளித்துக் கொண்டு இருப்பதை கண்ட மன்ஜித் சிங் உடனடியாக தனது டர்பனை கழட்டி எரிந்து காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் அது முடியாததால் ஆற்றில் குதித்து அவர்கள் 3 பேரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மன்ஜித் சிங் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். நீரின் வேகம் காரணமாக மூழ்கினார். உடனடியாக மன்ஜித் சிங்கின் நண்பர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றுக்குள் இறங்கி மன்ஜித் சிங்கை தேடினர். சுமார் 40 நிமிடம் தேடுதல் வேட்டைக்கு பின்னர் நீருக்கு அடியில் இருந்து மன்ஜித் சிங்கை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மன்ஜித் சிங், காப்பாற்றிய சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தன் உயிரை பற்றியும் கவலைப்படாது சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: நான் மட்டும் தோற்றுவிட்டால் அமெரிக்காவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ட்ரம்ப்