பைசர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்

pfizer vaccine

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 23 பேர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி மருந்தை பிரிட்டன், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொள்முதல் செய்துள்ளன.

நார்வேயில் இதுவரை 33 ஆயிரம் பேருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 29 பேர் பக்க விளைவு பாதிப்பாலும், 23 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் உயிரிழந்துள்ளனர்.

இறப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பைசர் தடுப்பூசி போட்டு இறந்த அனைவருமே 80 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

அனைவரும் நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த முதியவர்களாவர். தடுப்பூசியை செலுத்திய பின் இந்த முதியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

Covid-19 vaccine

நோய்வாய்ப்பட்ட வயதான நபர்களை தவிர மற்ற யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும், தடுப்பூசி போடப்படுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நார்வே சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நார்வே நாட்டின் மருத்துவ நிறுவன இயக்குனர் ஸ்டெய்னர் மேட்சன், “இதயம் சம்பந்தப்பட்ட நோய், முதுமை மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பக்கவிளைவுகளால் இறந்தவர்கள் குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை” எனக் கூறினார்.

அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசி போட்ட எட்டு நாட்களில் செவிலியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

கலிபோர்னியாவை சேர்ந்த செவிலியர் மாத்யூ பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்டு தொற்றுக்கு ஆளானார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter