அதிபர் ட்ரம்ப்பை பின்பற்றி உயிர்விட்ட வாலிபர்!

வைரஸ் எல்லாம் வெறும் வதந்திங்க என நினைத்துக்கொண்டிருக்கின்றனர் பெரும்பாலான அமெரிக்கர்கள். அதற்கு அதிபரும் விதிவிலக்கு அல்ல. இதனால் மாஸ்க் அணியாமல், கூட்டம் கூட்டமாக கடற்கரையில் குவிவதும், போராட்டத்தில் கலந்துகொள்வதுமாக அலட்சியமான செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதன்விளைவே அங்கு ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சூழலில் தனிமனித இடைவெளியும், முகக்கவசம் அணிவதே நோய் பரவலை தடுக்க ஒரே வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வார தொடக்கத்திலிருந்து அதிபர் ட்ரம்ப் மாஸ்க் போட தொடங்கிவிட்டார்.

trump

இந்நிலையில் ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ், தீவிர ட்ரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரரான இவர், செய்திகளில் கொரோனா குறித்து வரும் செய்திகளை பார்த்து பப்ளிசிட்டி ஸ்டண்ட், என்று விமர்சித்துவந்தார். அதிபர் ட்ரம்பே மாஸ்க் போடல சோ நானும் மாஸ்க் வாங்க மாட்டேன், போட மாட்டேன் என பேஸ்புக்கில் கருத்துபதிவிட்டுவந்தார். இப்படி கெத்தாக திரிந்த ரிச்சர்ட்டுக்கு கடந்த ஒன்றாம் தேதி உடல்நிலை சரியில்லாமல்போனது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த மூன்றே நாட்களில் ரிச்சர்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.