கொரோனா வைரசை ஒழிக்க வருடா வருடம் தடுப்பூசி?

Albert Bourla

கொரோனா வைரஸ் உருமாறிக்கொண்டே வருவதால் வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம் என்று பைசர் தடுப்பு மருந்து நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

Covid-19 vaccine

இந்நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்தாலும், கொரோனா பரவல் பாதிப்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஐரோப்பிய நாடுகள் தவித்துவருகின்றன.

இந்நிலையிலேயே பைசர் நிறுவன தலைவர் அல்பேர்ட், கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொரோனாவுக்கு நிரந்தரமாக தீர்வுக்கான வருடாந்தர கொரோனா தடுப்பூசி அவசியம் என்றும், இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட மக்கள் அடுத்த 6 மாதம் அல்லது, ஒரு வருடத்திற்குள் மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அல்பேர்ட்டின் கருத்தை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் ஆமோதிக்கின்றனர்.