இளவரசர் ஹாரியை நாட்டைவிட்டு வெளியேற சொல்லும் அமெரிக்கர்கள்!

harry

அமெரிக்க அரசியல் சாசனம் குறித்து விமர்சித்ததால் ஹாரிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உலகிலேயே செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்க நடிகையை திருமணம் செய்த பிறகு பிரிட்டன் இளவரசர் ஹாரி, பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து தனது மனைவி மேகன் மற்றும் குழந்தை ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்துவிட்டார்.

இருவரும், அரசு குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பிரிட்டன் மகாராணி எலிசபெத் அறிக்கை மூலம் அறிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஹாரி, “நான் அமெரிக்கா வந்து கொஞ்சம் காலம்தான் ஆகிறது.

அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் சட்டத் திருத்தம் குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால், அது பைத்தியக்காரத்தனமானது” எனக் கூறினார்.

Harry and Meghan won't return as working royals

ஹாரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கர்கள், அரசியல் சாசனத்தில் பிரச்னை இருப்பதாக நினைத்தால்,

ஹாரி பிரிட்டனுக்கே திரும்ப செல்லலாம் எனவும், ஹாரி கொஞ்ச காலத்தில் பிரிட்டன், அமெரிக்க ஆகிய இரு நாடுகளுக்கும் வேண்டாதவராகிவிடுவார் எனவும் கூறியுள்ளனர்.

அரசியல் சாசனத்தின் முதலாவது சட்டத்திருத்தமானது மத சுதந்திரம், பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம்,

மக்கள் ஓரிடத்தில் கூடும் சுதந்திரம் மற்றும் அரசின் மீதே பயமின்றி புகாரளிக்கும் உரிமை ஆகியவற்றை கொண்டுள்ளது.