முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு உத்தரவிடமாட்டேன்- ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாளொன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் முகக்கவசம் அணிய வற்புறுத்தாதீர்கள், முகக்கவசம் அணிவதும் அணியாமல் இறுப்பதும் தங்களின் தனிப்பட்ட விருப்பம் என அந்நாட்டு மக்கள் முகக்கவசம் அணிய அடம்பிடித்துவருகின்றனர். அதற்கு அதிபர் ட்ரம்பும் ஆதரவு தெரிவிப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. முகக்கவசம் அணிவதால் நோய் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என முரண்பாடான கருத்துக்களை அதிபர் ட்ரம்ப் தெரிவித்துவருகிறார்.

trump

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சூழலில் தனிமனித இடைவெளியும், முகக்கவசம் அணிவதே நோய் பரவலை தடுக்க ஒரே வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்தே மாஸ்க் போடாத ட்ரம்ப் கடந்த வாரம் போட தொடங்கிவிட்டார். பொதுமக்கள் முகக்கவசம் அணிய அமெரிக்க அரசு கட்டாயப்படுத்த வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அமெரிக்காவின் உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி அறிவுறுத்தினார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், “கொரோனா பரவுவதை தடுக்க அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு ஒருபோதும் உத்தரவிடமாட்டேன். முகக்கவசம் அணிவது குறித்து தேசிய அளவில் ஆணை பிறப்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. முகக்கவசம் அணிவது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருக்க வேண்டும். ” எனக் கூறினார்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa