இந்திய கடற்படையுடன் அமெரிக்கா போர் ஒத்திகை!

அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பலான USS NIMITZ இந்திய கடற்படையுடன் போர் ஒத்திகை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில காலமாக அமெரிக்கா – சீனா இடையே பல விவகாரங்களில் மோதல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க கடற்படை சீனாவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தங்களது, விமானம் தாங்கிய போர்க்கப்பல்களான USS NIMITZ மற்றும் USS RONALD REAGAN ஆகியவற்றை தென் சீன கடலில் நிலை நிறுத்திய அமெரிக்கா, போர் ஒத்திகையை நிகழ்த்தியது.

USS Nimitz

இந்நிலையில், USS NIMITZ போர் கப்பலை வழிநடத்தும் கடற்படைக்குழு வளைக்குடா நாடுகளுக்குச் செல்லும் வழியில் இந்திய கடற்படையுடன் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே போர் ஒத்திகை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இரு நாட்டு படைகளின் இயங்குதன்மையை வலுவாக்கும் முயற்சியாக இந்த ஒத்திகை நடத்தப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை நிலவி வரும் நிலையில் அமெரிக்காவுடனான இந்திய கடற்படையின் போர் ஒத்திகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா தரப்பில் இருந்து இதுகுறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது நம் நாட்டின் கிழக்கு கடற்படை குழு அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஒத்திகை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa