அமைதி வழியை போதித்த காந்தியையும் திருடர்கள் விட்டுவைக்கவில்லை: ட்ரம்ப்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மகாத்மா காந்தி சிலையை உடைக்க முயற்சித்தவர்களை அதிபர் ட்ரம்ப் திருடர்கள் என விமர்சித்திருந்தனர்.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை அடையாளம் தெரியாத சிலர் அவமதிப்பு செய்தனர். இதில் சேதமடைந்த சிலையை தூதரக அதிகாரிகள் பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்தனர். போராரட்டக்காரர்கள் காந்தி சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்தது. சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நூறு நாட்களுக்கும் மேலாக பிளாக் லைவ் மேட்டர்ஸ் சில இடங்களில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப் புகை மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தினர்.

trump

மின்னசோட்டா மாகாணத்தில் நேற்று ரிபப்ளிகன் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “அமைதி வழியை போதித்த மகாத்மா காந்தியின் சிலையை போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் உள்ள இந்த திருடர்கள் உடைக்க முயன்றுள்ளனர். இவர்கள் அடுத்தடுத்து ஜார்ஜ் வாஷிங்டன், ஜெபர்சன் ஆகிய தலைவர்களின் சிலையை உடைக்கவும் தயங்க மாட்டார்கள். சிலைகளை சேதப்படுத்துவோரை 10 ஆண்டு சிறையில் அடைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டேன். அதன்பிறகு தான் யாரும் சிலைகளை சேதப்படுத்தாமல் உள்ளனர்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்கர்களுக்கே அல்வா கொடுத்த பலே இந்தியர்கள்!

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa