வெள்ளை மாளிகையை மிளிர வைக்கும் கிறிஸ்துமஸ்

white house

உலகத்தில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும், வெள்ளை மாளிகையில் வழக்கமான கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தொடருகின்றன.

America is Beautiful என்ற தலைப்பில் இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியில் நுழைவு பகுதியில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் நட்சத்திரம் பார்வையாளர்களை வரவேற்கிறது.

Melania Trump to Decorate White House for Christmas One Last Time | PEOPLE.com

East Garden Room- இல் அதிபருக்கு கடந்த காலங்களில் அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டைகள் தொங்குகின்றன. அதில் இந்த ஆண்டுக்கான தலைப்பான America, the Beautiful என்ற வாசகமும் மின்னுகிறது.

நூலகத்தில் அமெரிக்காவின் 19-வது அரசியல் சாசன திருத்தத்தின் 100-வது ஆண்டை கொண்டாடும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திருத்தம் மூலம் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதையொட்டி நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான ஓவியப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Garden Room - White House Museum

முதல் மாடியில் கிறிஸ்துமஸ் மரங்களை சிறிய ரயில் சுற்றி வருகிறது. முதல் ரயில் பாதை முதல், நிலவுக்கு சென்ற அப்பலோ விண்கலம் வரை அங்கே உள்ளன. Blue Room-ல் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ கிறிஸ்துமஸ் மரம் உள்ளது. 18 அடி உயரத்துடன் அறையின் மேல்கூரையை முட்டியபடி நிறுத்தப்பட்டுள்ளது.

அருகே அமெரிக்க மாநிலங்கள் ஒவ்வொன்றும் எதில் சிறந்து விளங்குகிறது என சிறுவர்கள் வரைந்த ஓவியங்களுடன் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.

12 photos show how first lady Melania Trump decorated for her final Christmas in the White House | Business Insider

முன்னதாக, நவம்பர் இறுதியில், வெள்ளை மாளிகைக்கு வந்த கிறிஸ்துமஸ் மரத்தை, மெலனியா ட்ரம்ப் அதிகாரபூர்வமாக பெற்றுக் கொண்டார்.

இந்த மாத தொடக்கத்தில் வெள்ளை மாளிகையின் வெளியே தேசிய கிறிஸ்துமஸ் மரத்தை, அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் ஒளிவிளக்கேற்றி வைத்தார் மெலனியா.

ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றப்பிறகு வெள்ளை மாளிகையில் கொண்டாடும் 4-வது கிறிஸ்துமஸ் இது. அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், ட்ரம்ப் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகையில் இது கடைசி கிறிஸ்துமஸாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கிய ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter