4 லட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்த பெண்! ஆனந்த கண்ணீரில் ஹோட்டல் ஊழியர்கள்

tip

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடச்சென்ற ஒரு பெண், சாப்பிட்டு முடித்ததும் ஊழியர்களுக்கு 5,600 டாலர் டிப்ஸ் கொடுத்து சென்றார்.இது இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாயாகும்.

ஓஹியோ மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு இளம்பெண் ஒருவர் இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார். அவருக்கு ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் உணவு பறிமாறியுள்ளனர். அந்த உணவகத்தில் மொத்தம் 28 ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். உணவு உண்டு முடித்தபின், நமக்கு அன்புடன் பறிமாறிய ஊழியர்களுக்கு ஏதோ நம்மால் முடிந்ததை வழங்குவோம். ஆனால் அந்த பெண், சாப்பிட்டு முடித்து, உணவகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தலா 200 டாலர் டிப்ஸாக வழங்கி சென்றார்.

Customer leaves $5600 tip on Christmas bill at Ohio restaurant for staff to  take home an extra $200 | Daily Mail Online

கொரோனா கொடுங்காலம் அமெரிக்காவை ரொம்பவே ஆட்டிப்படைத்துவருகிறது. இதனிடையே அங்குள்ள உணவகங்கள் மூடப்பட்டதோடு, தொழிலாளர்கள் வேலை இழந்து நின்ற நி்லையில், தற்போது மீண்டும் உணவகங்கள் திறக்கப்பட்டு ஊழியர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. இந்த சூழலை உணர்ந்தே இவ்வளவு தொகையை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உணவக ஊழியர்கள் உற்சாகமாக கொண்டாடவேண்டுமென்றும் இவ்வளவு தொகையை அந்த பெண்மணி வழங்கியுள்ளார். டிப்ஸை உணவக உரிமையாளரின் அனுமதியுடன் பெற்றுக்கொண்ட ஊழியர்கள் ஆனந்த கண்ணீர் சிந்தினர். இந்த சம்பவங்களை தனது முகநூலில் பதிவிட்டுள்ள உணவக உரிமையாளர், மனிதம் மறையவில்லை என குறிப்பிட்டுள்ளார். முகம் தெரியா அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: “இந்திய விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்”

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter