பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை!

Modi- Trump

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் இடமளிக்கக்கூடாது என அந்த நாட்டுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

பயங்கரவாத தடுப்புக்கான இந்திய – அமெரிக்க கூட்டு நடவடிக்கை குழுவின் 17ஆவது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் கூட்டறிக்கையை வெளியி‌ட்டுள்ளன.

அதன்படி மும்பை தாக்குதல் மற்றம் பதான்கோட் விமானப்படைத் தள தாக்குதல் உள்ளிட்டவற்றில் தொ‌டர்புள்ளவர்களை தண்டிப்பதுடன் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியானதாக மேற்கொள்ள வேண்டும் என கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‌பயங்கரவாதச் செயல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை  இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்ப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Indo-US

பயங்கரவாத தடுப்புக்கான தகவல்களை பகிர்வது, பயங்கரவாதத்திற்கு நிதி செல்வதை தடுக்கும் பணியை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்தும் இரு தரப்பும் பேசியுள்ளதாக கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தாங்கள் அடைக்கலம் அளிக்கவில்லை என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அந்நாட்டிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைளை உடனடியாக எடுப்போம் என பாகிஸ்தான் அரசு உறுதியாக கூறவேண்டும் என்றும் கூட்டறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதேபோன்று பதான்கோட் விமானப்படை தளத்தில் 2016 ஆம் ஆண்டு, ஜனவரி 2-ஆம் தேதி நடந்த தாக்குதல்களில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க- இந்தியா கூட்டாக நெருக்கடி கொடுத்துள்ளது.

இதையும் படிக்கலாமே: காட்டுத்தீயால் கறுகும் கலிபோர்னியா; 27 பேர் பலி

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa