வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றம் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது ட்ரம்ப் நிர்வாகம்…

அமெரிக்கா பல்கலைகழங்களில் ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பயிலும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை ட்ரம்ப் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்த அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வரும் செமஸ்டரில் ஆன்லைனில் மட்டுமே கல்வி பயிலும் எப் 1 மற்றும் எம் 1 விசா பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை அறிவித்தது.

Students

இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயத்தில் இருந்தனர். ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை எதிர்ப்பு பல்வேறு கலைகழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளதால் வெளிநாட்டு மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.