அமெரிக்காவில் பெரியார் புகழ்பாடும் சிறுவர்கள்

us periyar

தந்தை பெரியாரின் பிறந்த நாள் கடந்த 17-ஆம் தேதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. உலகமே கொண்டாடும்போது அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு மட்டும் விதிவிலக்கா? அங்கும் இணைய வழியில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

5, 6, 7 வயதினர் ஒரு பிரிவிலும், 8, 9, 10 வயது சிறுவர்கள் மற்றொரு பிரிவிலும் கலந்துகொண்டனர். மூன்று நடுவர்கள் – மூன்று ஏற்பாட்டாளர்கள் தலையில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. முதல் பிரிவினருக்கு பெரியார் தாத்தாவை ஏன் எனக்குப் பிடிக்கும் என்ற தலைப்பு, உலகப் பகுத்தறிவாளர்களுக்கு வாழ்த்து என்ற தலைப்பு இரண்டாவது பிரிவுனருக்கும்வ் அழங்கப்பட்டன. போட்டியில் கலந்துகொண்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலை குரலில் பெரியார் புகழ் பாடி அசத்தினர்.

us periyaar

“பெரியார் இன்று ஏன் தேவை” என்ற தலைப்பில் 11 வயதிற்கும் மேற்பட்டோர், ஒவ்வொருவரும் சிறந்த மேடைப் பேச்சாளர்கள்போல் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்காவிலுள்ள கறுப்பினப் போராட்டம் என்பன குறித்து பேசி அசத்தினர். இவர்கள் கட்டாயம் எதிர்காலத்தில் பெரியார் தொண்டர்கள் மட்டுமல்ல, இங்குள்ள தலைவர்களாகவும் வருவார்கள் என்பதில் அய்யமில்லை என நடுவர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளி குழந்தைகள் இந்திய தலைவரையும் கலாச்சாரத்தையும் பற்றி பேசுவது மிக மிக பாராட்டக்கூறிய விசயமே. போட்டிகள் முடிந்த பின் பரிசளிப்பு விழாவைப் பறை இசை முழங்கி சிறுவர்கள் தொடங்கி வைத்தனர். அமெரிக்காவின் நீண்ட காலப் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் பன்னாட்டமைப்பு பொறுப்பாளருமான வ.ச.பாபு நிகழ்ச்சிக்கு நன்றி உரை ஆற்றினார். பெரியார் புகழ் குறையவும் இல்லை மறையவும் இல்லை மாறாக அமெரிக்கா வரை சென்று சேர்ந்துள்ளது.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில இணைய வழி கலந்தாலோசனை

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa