பிடன் மீதான ஊழல்களை ஊடகங்கள் மறைக்கின்றன- ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

trump vs joe biden

2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இருந்து, ஜோ பிடன் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இதனை ஜோ பிடன் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், பிடன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அமெரிக்காவின் பிரதான ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

ஊடகங்களுக்கு தேவையான பணத்தை பிடன் வழங்குவதால், அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:  அதிபர் ட்ரம்புக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும் சிலைகள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter