பைடனின் வெற்றியை உறுதி செய்த தேர்வாளர்கள் குழு

joe biden

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள தேர்வாளர்கள் குழுவினர் தங்கள் வாக்குகளின் அடிப்படையில் ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த மாதம் மூன்றாம் தேதி 46 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடைபெற்றது.

அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 இடங்களிலும், குடியரசுக்கட்சி வேட்பாளர் அதிபர் ட்ரம்ப் 232 இடங்களிலும் வெற்றிப்பெற்றனர்.

இதனையடுத்து அமெரிக்க அதிபராக பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் தேர்வு செய்யப்பட்டனர்.

இருப்பினும் இவர்களை அரியணையில் அமரவைப்பவர்கள் எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவினர். இவர்களின் வாக்களிப்பால் தேர்தல் முடிவுகள் மாறவோ, முறைகேடுகள் நடக்கவோ வாய்ப்பில்லை.

அதன்படி தேர்வாளர் குழுவினர்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 538 தேர்வாளர்கள் வாக்களித்தனர்.

அதிபரை தேர்வு செய்வதற்கு 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நிலையில் பைடனுக்கு 306 வாக்குகளும், ட்ரம்புக்கு 232 வாக்குகளும் கிடைத்தன.

அதிக மக்கள்தொகையைக் கொண்ட கலிஃபோர்னியா மாநிலத்தில் 55 தேர்வாளர்களின் வாக்குகளை பைடன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பைடன் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ்களை மாகாணங்களின் ஆளுநர்கள் தேர்வாளர்கள் குழுவிடம் சமர்பித்துள்ளனர்.

இவை நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திற்கு அனுப்பப்பட்டு அடுத்த மாதம் 6 ஆம் தேதி அதிபராக பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

தேர்வாளர்கள் குழுவினர் பைடனின் வெற்றியை உறுதி செய்த நிலையில், ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால் பைடன் பதவியேற்பு விழாவில் சிக்கல் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கொரோனா வைரஸை கொல்லும் எல்இடி விளக்குகள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter