பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனா மரணங்களை மருத்துவர்கள் உயர்த்தி காட்டுகின்றனர்- ட்ரம்ப்

Trump

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,35,529 ஆக அதிகரித்துள்ளது, மேலும், அங்கு இதுவரை 9 லட்சத்து 34 ஆயிரத்து 4955 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “கொரோனா காலம் தொடங்கியதற்கு பின் இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களும், கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள்.

corona vaccine

யாராவது கொரோனாவால் உயிரிழந்தால் நமது மருத்துவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும், அதனால் மருத்துவர்கள் பலி எண்ணிக்கையை உயர்த்தி காட்டுகின்றனர்.

ஆனால் ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் யார் இறந்தாலும் அவர்களுடைய உண்மையான இறப்பு காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது.

அப்படி பார்த்தால் அமெரிக்காவில் தேசியளவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுகின்றனர்.

அமெரிக்காவிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் முக்கால்வாசி பேர் தொற்றிலிருந்து குணமடைந்துவருகின்றனர். அதற்கு நானும் எனது மனைவியுமே சிறந்த உதாரணம். அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கையும் தற்போது குறைந்துவருகிறது” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter