அதிக நபர்கள் பின்தொடரும் உலகத் தலைவர்கள்! ஒபாமாவுக்கு முதலிடம், ட்ரம்புக்கு இரண்டாம் இடம்!

அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலக தலைவர்களில் ஒருவராக அதிபர் ட்ரம்ப் மாறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை ட்விட்டரில் 12 கோடி பேர் பின் தொடர்கின்றனர். இதனால் அதிக நபர்களால் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் ஒபாமா முதலிடத்திலும் அதிபர் ட்ரம்ப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். அதிபர் ட்ரம்பை ட்விட்டரில் 8.3 கோடி பேர் பின் தொடர்கின்றனர். இதையடுத்து 6 கோடி பாலோவர்களைப் பெற்று பிரதமர் மோடி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

trump

அமெரிக்காவில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களில் 19 சதவீதம் பேர் அந்நாட்டு அதிபரான டொனால்டு ட்ரம்ப்பை பின் தொடர்பவர்களாக உள்ளனர். ப்யூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், இந்த தகவல் வெளிவந்துள்ளது. ட்விட்டர் மூலமாக தான் தெரிவிக்கும் கருத்துகளுக்கு அமெரிக்க மக்கள் பெரும் ஆதரவை அளிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa