புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆபத்து- டெக்சாஸ் பல்கலை ஆய்வு

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சிக்கல் அதிகம் என டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60ஆயிரத்தும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அங்கு தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக நியூயார்க், கலிபோர்னியா, ஃபுளோரிடா, நியூஜெர்சி, டெக்சாஸ், அரிசோனா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

covid 19

இந்நிலையில் புகைப் பழக்கத்தால் பெருமூளை நரம்பியல் செயலிழப்புகள் ஏற்படும் என நன்கு அறியப்பட்ட நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பலருக்கும் அதே போன்ற விளைவுகள் தென்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பிரபல ஆராய்ச்சியாளர் லூக்கா கக்கல்லோ மற்றும் சக ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களுள் எத்தனை பேருக்கு புகைப்பழக்கம் இருந்தது என்பது குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டனர். 214 கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களின் மேல் நடத்தப்பட்ட அந்த ஆராய்ச்சியில் 36.34 சதவீதம் பேருக்கு புகைப்பிடிப்பதால் ஏற்படும் அதே பெருமூளை மற்றும் நரம்பியல் செயலிழப்பு உண்டான அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மேலும் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு கொரோனா ஏற்படும் பட்சத்தில் தொடக்கத்தில் இரத்தம் உறைதல் பிரச்னை அதிகரித்து இறுதியில் பெருமூளை செயலிழக்கும் என கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமின்றி புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா ஏற்படும் போது பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa