வரலாற்றில் இன்று! அமெரிக்க வல்லரசை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்

twin tower attack

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் 19 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி கருப்பு தினம் என்றே செல்லலாம். காரணம் அல்கொய்தா பயங்கரவாதிகள், விமானங்களை கடத்தி உலகின் தூங்கா நகரம் என அழைக்கப்படும் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர். காலை காலை 8:46 மணி, ரோட்டில் இருப்பவர்கள் அதிர்ந்து போய் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்களை அதிர்ந்து பார்த்த தருணம்… நெஞ்சோரத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி வானுயர கட்டடங்கள் மளமளவென சரிய தொடங்கிய காட்சிகள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை.

twin tower attack

இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீயால் நியூயார்க் நகரமே இருளில் மூழ்கும் அளவிற்கு கரும்புகை சூழந்தது. வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது. தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், அதே வாஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் அதாவது காலை 9:03க்கு மற்றொரு விமானம் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தொடர்புடைய அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடனை பழிவாங்க துடித்த அமெரிக்கா 2011 மே மாதம் 2 ஆம் தேதி கொல்லப்பட்டார்.

இதையும் படிக்கலாமே: செப்.15 க்குள் டிக்டாக்கின் செயல்பட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்காவிடில் வெளியேற வேண்டும்: ட்ரம்ப்

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa