அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஸ்டீஃபன் கர்ரி சாதனை

stephen

கூடைப்பந்து விளையாட்டில் பந்தை துல்லியமாக குறி வைத்து கூடைக்குள் போடுவது மிகவும் முக்கியம். அமெரிக்காவின் சிகாகோவில் ஸ்டீஃபன் கர்ரி என்ற வீரர் பந்தை தொடர்ச்சியாக ஒரு முறையல்ல…இரு முறையல்ல…105 முறை துல்லியமாக கவனம் சிதறாமல் கூடைக்குள் அடுத்தடுத்து போட்டு வியக்க வைத்துள்ளார்.

Stephen Curry Drops 36 Points in Warriors' "Windy City" Win - December 27, 2020 - YouTube

கூடைப்பந்து விளையாட்டில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் 3 புள்ளிக்கான தூரத்தில் அதாவது கூடையில் இருந்து தொலைவில் நின்றவாறு இச்சாதனையை புரிந்துள்ளார் ஸ்டீஃபன் கர்ரி. இதற்கு முன் தொடர்ச்சியாக 77 முறை பந்தை கூடைக்குள் போட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையையும் ஸ்டீஃபன் கர்ரி படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவின் NBA தொடரில் 2 ஆயிரத்து 500 புள்ளிகள் பெற்ற 3ஆவது வீரர் என்ற பெருமையையும் ஸ்டீஃபன் கர்ரி நெருங்கியுள்ளார்.

கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமாக, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பந்தை கொண்டு சென்று திரும்பக்கூடிய ஆட்டம்.

உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகில் மிகவும் புகழ்பெற்றதும் பரவாலாக விளையாடப்படுவதுமான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று ஆகும்.

ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம்.

பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.அ

 

இதையும் படிக்கலாமே: ரூ.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter