அதிபர் தேர்தலில் 2 முறை வாக்களிக்க முயற்சி செய்யுங்கள்: ட்ரம்ப்

Trump

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் களம்காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில்முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

ஆனால் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்து வருகிறது. தேர்தலில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அஞ்சல் வாக்களிப்பில் பல்வேறு மோசடி நடைபெற வாய்ப்பிருப்பதாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இருப்பினும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள வட கரோலினா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நவம்பர் 3 ஆம் தேதிக்கு முன்னதாகவே அஞ்சல் வழி வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

President Donald Trump speaks during a “Salute to America” event on the South Lawn of the White House, Saturday, July 4, 2020, in Washington. (AP Photo/Patrick Semansky)

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், “வாக்காளர்கள் அஞ்சல் மூலமும் வாக்களிக்கட்டும், தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்றும் வாக்களிக்கட்டும்” எனக் கூறினார்.

இதனால் ட்ரம்ப் தேர்தலில் குழப்பை ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் ட்ரம்ப் ஆதரவாளர்களை 2 முறை வாக்களிக்க சொல்லவில்லை, அவருடை பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என ட்ரம்பின் பரப்புரைக் குழு விளக்கம் அளித்துள்ளது.

பல்வேறு அமைப்பினரால் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் அதிபர் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஜோ பிடன், கமலா ஹாரிஸ் அணிக்கு 50 விழுக்காடு ஆதரவும், ட்ரம்ப்பின் அணிக்கு 46 விழுக்காடு ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கருத்து கணிப்பு முடிவு ட்ரம்ப் ஆதரவாளர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் அதிபர் ட்ரம்ப் தரப்பிலிருந்து மோசடிகள் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa