கோமாளி போல் வேடமணிந்து கொரோனா மரணம் அறிவிப்பு!

US Health Official

அமெரிக்காவில் ஓரிகான் மாகாணத்தின் சுகாதார அதிகாரி, கோமாளி போல் வேடமணிந்து கொரோனா உயிரிழப்புகளை அறிவித்தார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.

கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அங்கு 94 லட்சத்து 75 ஆயிரத்தும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில், அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Corona Patients

சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன. இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஓரிகான் மாகாணத்தில் மொத்தமாக 38,160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோமாளி போல் வேடமணிந்த சுகாதாரத்துறை அதிகாரிம் இன்று மட்டும் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஹாலோவீன் திருவிழாவை எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு சிலர் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகளை அரசு அவ்வப்போது வெளியிட்டு மக்களை அரசு பயமுறுத்திவருவதாக சுகாதாரத்துறையினரின் செயலுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே:  இந்தியாவை பாருங்கள்… எவ்வளவு அசுத்தமாக உள்ளது: ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter