அமெரிக்காவில் எதிர்ப்பால் பதவி விலகிய இந்திய வம்சாவளி!

neera

ஜோ பைடன் அமைச்சரவைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய பெண் எதிர்ப்பை தொடர்ந்து பதவி விலகினார்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.

வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநர் என்ற முக்கிய பொறுப்பு நீரா டாண்டெனுக்கு (neera tanden) வழங்கப்பட்டது.

Neera Tanden: Why the Indian-American picked to run Joe Biden's budget office is controversial

இந்நிலையில்அமெரிக்கன் வளர்ச்சி மையம் என்ற அரசு சாரா அமைப்பில், கொள்கைகளை வடிவமைப்பதில் நிபுணரான, நீரா டான்டன் பல எம்பிக்கள் குறித்து சமூக வலைதளத்தில் விமர்சித்து இருந்தார்.

அதனால் அவருடைய நியமனத்துக்கு செனட் சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செனட்டில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் தலா 50 எம்பிக்கள் உள்ளனர்.

அவர்களுடைய ஆதரவு இருந்தால் மட்டுமே பதவியில் அமர முடியும். பைடனின் சொந்த கட்சியான ஜனநாயகக் கட்சி, எம்.பிக்களே நிராவின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் ஆச்சர்யம்.

இதனால் இந்த பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக நீரா டான்டன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், அனுபவம் வாய்ந்த நீரா டாண்டனின் சேவையை, சரியான நேரத்தில், சரியான பதவியில் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அமெரிக்க வர்த்தக மையம் என்ற முதலாளித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு நிரா டாண்டனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.