கொரோனாவை விரட்ட இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாட்டுச்சாணத்தை கொண்டு சென்ற நபர்!

Cow Dung

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2.5கோடியை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாபரவல் பாதிப்பால் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது.

இதனால் இந்தியாவே நிலைகுலைந்து போய் உள்ளது. பல்வேறு உலக நாடுகளும் கொரோனாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றன.

Cow dung cakes found in Indian passenger's luggage at US airport. Full story here - Trending News News

இதனால், பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா செல்ல தடை விதித்துள்ளன.

இதனிடையே உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் உள்ளிட்டோர் மாட்டின் சிறுநீரைப் பருகினால் கொரோனா தொற்று ஏற்படாது என அண்மையில் கூறியிருந்தார்.

இதனையடுத்து இந்தியர்கள் சிலர் சிறுநீர் மற்றும் மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்கட் விமானநிலையத்தில், இந்தியர் ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர் கொண்டுவந்த பையை திறந்து பார்த்த போது, பார்சலில் வறட்டி எனப்படும் மாட்டுச்சாணம் இருந்தது.

அமெரிக்காவிலுள்ள கால்நடைகளுக்குக் கால் மற்றும் வாய் தொற்று நோயை ஏற்படுத்துவதால் அங்கு மாட்டுச்சாணம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்தியரிடமிருந்து மாட்டுச்சாணத்தை பறிமுதல் செய்து உடனடியாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்,