ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்

Trump

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் தோல்வியை தழுவினார்.

இதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி புதிய அதிபர் தேர்வை தேர்வு செய்வதற்காக வாஷிங்டனில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்ட ட்ரம்பின் ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

TRUMP

தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு ட்ரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

அதுவே நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து ட்ரம்பின் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ட்ரம்பின் பேஸ்புக் பக்கம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டிருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதியானால் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு அனுமதிக்கப்படும் என அந்நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பேஸ்புக்கின் இந்த செயல் தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.