இந்திய சிறுவனை காப்பாற்றிய அமெரிக்க மருந்து

Hyderabad kid

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் முதுகு தண்டுவாட நோயால் அவதிப்பட்டு வந்த 3 வயது சிறுவனுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை செலுத்தி மருத்துவர்கள் காப்பாற்றினர்.

சதீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த யோகேஷ் குப்தா, ரூபல் குப்தா தம்பதியினரின்
3 வயது மகன் அயான்ஷ் ஸ்பைனல் மஸ்குலர் அட்ரஃபி (( spinal muscular atrophy)) என்ற முதுகு தண்டுவட நோயால் அவதிப்பட்டான்.

Hyderabad kid with rare genetic disease gets world's costliest injection worth Rs 16 crore

இந்த நிலையில் ஜொல்ஜென்ஸ்மா ((ZOLGENSMA)) என்ற மருந்தை இரு கைகளில் செலுத்தி குணப்படுத்தலாம் என்றும் அதற்கு ஏறத்தாழ 16 கோடி ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தம்பதி சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து முக்கிய பிரபலங்கள் உள்பட தாராள உள்ளங்கள் 65 ஆயிரம் பேர் நிதி உதவி அளித்தனர்.

மேலும் மருந்திற்கான வரி விதிப்பான 6 கோடி ரூபாயை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து உலகிலேயே விலை உயர்ந்த மருந்து அமெரிக்காவில் இருந்து கடந்த 8-ம் தேதி கொண்டு வரப்பட்டு சிறுவனுக்கு செலுத்தி மருத்துவர்கள் காப்பாற்றினர்.

இக்கட்டான கொரோனா காலத்திலும் சிறுவனுக்கு உதவிய அமெரிக்காவுக்கு அவரது பெற்றோர் மற்றும் மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.