சாலையில் பணத்தை வீசி எரியும் நபர்! வைரல் வீடியோ

Money

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா தொற்று பல்வேறு உலக நாடுகளில் தொற்றின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையை ஏற்படுத்தி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகவும் பணக்கார மனிதன் ஒருவர் கொரானா நோயினால் இறந்து விட்டார்.

இறப்பதற்கு முன்பு தன் நெருங்கிய நண்பனிடம் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கொடுத்து, இந்த பணங்கள் அனைத்தையும் நடு வீதியில் நின்று மேலே வீசி எறி, இதை பார்க்கும் மக்கள் இந்த உலகத்தில், பணம் செல்வம் எல்லாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முன்பு எவ்வித மதிப்பும் இல்லை என்று புரிந்து கொள்ளட்டும். என்று கூறிவிட்டு மரணம் அடைந்தார்.

அந்த நண்பரின் கடைசி ஆசையை, கண்ணீரோடு நிறைவேற்றினார் அவரது நண்பர். இதுதொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.