அமெரிக்காவில் 10இல் ஒருவர் உணவின்றி தவிப்பதாக ஆய்வில் தகவல்!

அமெரி்க்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு புறம் தீவிரமடைந்துள்ள நிலையில் இதனால் ஏற்பட்ட தொழில் முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் 10இல் ஒருவர் உணவின்றி தவிப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்றால் வேலையிழந்த 10 அமெரிக்கர்களில் ஒருவர் பழைய வேலைக்கு அழைக்கப்பட வாய்ப்பில்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்தது. தற்போது கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கியுள்ளதால், அங்கு பல்வேறு நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இருக்கும் வேலையும் வெளிநாட்டவர் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஹெச் 1 பி விசா உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பெரும்பாலான இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று மற்றும் பொதுமுடக்கத்தால் அமெரிக்காவில் 11 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.

no foodஇந்நிலையில் கொரோனா தொற்றுக்கு முன்பிருந்ததை விட இரண்டரை மடங்கு அதிகமானவர்கள் தற்போது உணவு கூட கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். அதே போல வாடகை வீட்டில் குடியிருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் வாடகை கொடுக்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக கருப்பின மக்கள் அதிக பொருளாதார இழப்புகளை சந்தித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
Facebook : https://www.facebook.com/tamilmicsetusa
Twitter : https://twitter.com/tamilmicsetusa