அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மாணவர்கள்!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு கல்வி பயின்ற வெளிநாட்டு மாணவர்களில், 48 சதவீதம் பேர், இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்த அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வரும் செமஸ்டரில் ஆன்லைனில் மட்டுமே கல்வி பயிலும் எப் 1 மற்றும் எம் 1 விசா பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை அறிவித்தது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயத்தில் இருந்தனர். ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை எதிர்ப்பு பல்வேறு கலைகழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தத்தையடுத்து ட்ரம்ப் நிர்வாகம் உந்த அறிவிப்பை திரும்ப பெற்றது. இதனால் வெளிநாட்டு மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.

online classes

இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும், சீனாவில் இருந்து, நான்கு லட்சத்து, 74 ஆயிரத்து, 497 மாணவர்களும், இந்தியாவில் இருந்து, இரண்டு லட்சத்து, 49 ஆயிரத்து, 221 மாணவர்களும், அமெரிக்காவிற்கு படிக்க வந்திருப்பதாக அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது மொத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் 48 சதவீதமாகும். கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்றுள்ளனர். கத்தார், சிரியா, ஏமனிலிருந்து, மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே, அமெரிக்காவுக்கு படிக்க வந்திருப்பதாகவும் அசர்பைஜான், கம்போடியா, கிர்கிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அமெரிக்கா வந்துள்ளனர் என்றும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது

இதையும் படிக்கலாமே: இந்திய வம்சாவளி அதற்கு சரிவரமாட்டார் என் மகளே பொருத்தமானவர்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa