9 வயதில் ஆண்டுக்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் சிறுவன்!

Ryan Kaji

2020 ஆம் ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 9 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளார்.

நியூஜெர்சியை தலையிடமாக கொண்டு இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்தாண்டின் அதிகம் சம்பாதித்த யூடியூபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி என்ற 9 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த எட்டு வயதான சிறுவன் ரியான் காஜி. இவர் ரியான் வேர்ல்ட் என்ற யூடியூப் பக்கத்தை வைத்துள்ளார். அந்த யூடியூப் பக்கத்தில் குழந்தைகளின் விளையாட்டுப்பொருட்கள் குறித்த விமர்சனங்களை வீடியோவாக பதிவிட்டுவருகிறார். ரியான் காஜிக்கு அவரது பெற்றோர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ரியான் வேர்ல்ட் யூடியூப் பக்கம் தொடங்கப்பட்டது. தான் வாங்கும் விளையாட்டு பொருட்களை அன்பாக்ஸ் செய்யும் வீடியோக்களாக இந்த பக்கத்தில் ரியான் பதிவிட்டு வருகிறார். புதிதாக விற்பனைக்கு வந்த பொம்மைகளை வைத்து விளையாடிக் காட்டும் விதமாக அந்த வீடியோக்கள் உள்ளன. இந்த வீடியோக்கள் குழந்தைகள் மத்தியில் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டுள்ளது.

Hit YouTube channel Ryan ToysReview accused of deceiving kids into watching sponsored content

ரியானின் ஒவ்வொரு வீடியோக்களும் சுமார் 1,200 கோடி பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது. ரியானின் சேனலை 4.17 கோடி பேர் பின்பற்றுகின்றனர். யூடியூப் சேனல் மூலம் ஆண்டுக்கு 220 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் ரியான். அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர் பட்டியலில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ரியான் முதலிடத்திலேயே நீடிக்கிறார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க உணவகங்களில் மலைப்பாம்பு அறிமுகம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter