வெங்காயத்தை கண்டு தெறித்து ஓடும் அமெரிக்கர்கள்!

வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்வதுண்டு, ஆனால் அமெரிக்காவில் பலரும் சின்ன வெங்காயம் என்றாலே அலறியடித்து ஓடுகின்றனர். காரணம் என்ன? பார்க்கலாம்.

என்ன பயம் என விசாரித்தால்,  வெங்காயம் ஆபத்தில்லையாம். அதில் உள்ள ரசாயன உரம் தான் ஆபத்து என்கின்றனர் அமெரிக்கர்கள். செயற்கை உரமூட்டியை பயன்படுத்தியே வெங்காயத்தை விளைவிக்கின்றனர். இதனால் வெங்காயம் சாதாரண அளவை விட கொஞ்சம் பெரிதாக உள்ளது. அதாவது ஒவ்வொரு வெங்காயத்தின் அளவும் 2 கிலோ வரை இருக்குமாம். இப்படி விளைவிக்கப்படும் வெங்காயத்தின் நிறமும் வேறுபட்டு இருக்கும் எனக் கூறுகின்றனர் அமெரிக்கர்கள். குறிப்பாக சிவப்பு, மஞ்சள் நிறங்களிலும், இனிப்பாகவும் வெங்காயம் இருக்கிறதாம். ஆனால் சுவை மட்டும் இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை போன்று இருக்குமாம். பெரும்பாலும் அசைவ உணவு வகைகளில் இந்த வகை வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய வெங்காயத்தால் என்ன ஆபத்து வந்துவிடும் என கேட்கலாம். சிக்கன் போன்ற அசைவப் பொருட்கள் மூலம் பரவும் ‘சால்மோனல்லா பாக்டீரியா’ வகை பாக்டீரியா சிவப்பு வெங்காயத்திலும் உள்ளதாம். அண்மையில் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் சிவப்பு வெங்காயத்தின் மூலம் சால்மோனல்லா பாக்டீரியா காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 396 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு காய்ச்சல் உள்ளிட்ட  பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் சிவப்பு வெங்காயத்தை வாங்குவதை நிறுத்திக் கொண்டனர். இதையடுத்து இந்த இனிப்பு வகை வெங்காய வகைகளுக்கு கலிபோர்னியா உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் அமெரிக்க மக்களை அச்சுறுத்திவரும் நிலையில் தற்போது சால்மோனல்லா பாக்டீரியா இன்னும் பீதியை கிளப்பி வருகிறது.

வெங்காயம் மட்டுமில்லாமல், மாட்டிறைச்சி, சிக்கன், முட்டை, பன்றி இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகளிலும் சால்மோனல்லா பாக்டீரியா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: வரலாற்றில் இன்று: சுதந்திர தேவி சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட தினம்!