ப்ளீஸ் தோல்வியை ஒத்துக்கொங்க! ட்ரம்பிடம் கெஞ்சும் அவர் மருமகன்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டதாக ஜோ பைடன் பொய்யாக கூறிக் கொள்கிறார் என, ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டு தோல்வியை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக ட்ரம்ப்புடன் அவரது மருமகன் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் முடிவுகள் ஜோ பைடனுக்கு சாதகமாக முடிவுகள் வெளியான நிலையில், ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜோ பைடன் வெற்றியாளராக பொய்யாக காட்டிக் கொள்வதை மக்கள் அனைவரும் அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், உண்மை என்னவென்றால், இந்தத் தேர்தல் முடிவடைவதற்கான காலம் வெகு தொலைவில் உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஜோ பைடனை வெற்றியாளர் என எந்தவொரு மாநிலமும் அறிவித்து சான்றிதழ் வழங்கவில்லை என்றும், கடும் போட்டி நிலவியதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட மாநிலங்களில் முடிவுகள் வரவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவதையும், சரியான வெற்றியாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வாக்குகள் நேர்மையாக எண்ணப்படும் வரை ஓயமாட்டேன் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தோல்வியை ஒப்புக்கொள்ள வைப்பது தொடர்பாக ட்ரம்ப்புடன் அவரது மருமகனும் மூத்த ஆலோசகருமான ஜேர்டு குஷ்னர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ட்ரம்பின் மனைவி மெலனியாவும் ட்ரம்பிடம் தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியதாக தெரிகிறது.

மேலும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆட்சி மாற்ற நடைமுறைகளை தொடங்குவது குறித்து தங்கள் தரப்புடன் ட்ரம்ப்போ அல்லது அவரது பிரதிநிதிகளோ இன்னும் தொடர்புகொள்ளவில்லை என்று பைடனின் தேர்தல் பரப்புரை மேலாளர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: இந்தியாவுடன் நட்பு பாராட்டுவாரா பைடன்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter