அமெரிக்க வீரர்களிடையே பரவும் மர்ம நோய்!

Havana syndrome

அமெரிக்க உளவுபிரிவு துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மர்ம நோய் ஒன்று பரவுவது அந்நாட்டு அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகளுக்கு சமீபத்தில் மூளையில் சில பிரச்னை ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சிஐஏ அதிகாரிகள், தூதர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்ட 130 பேர் மூளை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

What is 'Havana Syndrome"? - Stellar IAS Academy

தலை சுற்றல், ஒற்றை தலைவலி, வாந்தி, மூக்கில் இருந்து ரத்தம் வடிதல் ஆகியவையே இந்நோயின் அறிகுறிகளாகும்.

இந்நோயால் பாதிப்புக்குள்ளாகும் அதிகாரிகள், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு பணியாற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்

சீனா, கியூபா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளில் பணியாற்றியவர்களுக்கும் இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நோய் ஹவானா சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது.

கியூபாவிலுள்ள ஹவானா நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்டால் இதற்கு ஹவானா என பெயர் வந்தது.

மனித உடலை ஊடுருவும் மின்காந்த கதிர்வீச்சைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல் இந்நோய்க்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆகவே இந்த மைக்ரோவேவ் தாக்குதலை ரஷ்யா அல்லது சீனா நடத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் அமெரிக்க மக்களுக்கு இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியை கொடுக்கிறது.