அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்த தமிழர்!

அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்த தமிழருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

விவசாயிகள் தங்கள் பயிர் செய்த காய்கறிகள், பழங்களை இடைத் தரகர்கள் யாருமின்றி அவர்களே நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும் சந்தையே உழவர் சந்தை என அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் அமைக்கப்படும் இந்த உழவர் சந்தை, அமெரிக்காவில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மணீஷ் என்ற மகன் உள்ளார். மணீஷ் கட்டுமான மேலாண்மை நிபுணராக வேலை செய்து வருகிறார்.

இவர் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள லெக்சிங்கடன் நகரத்திற்கான மிகப் பெரிய உழவர் சந்தை கட்டடத்தை வடிவமைத்துள்ளார்.

பழமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக செங்கல் உள்ளிட்டவற்றால் வித்தியாசமான முறையிலும் நவீன வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது இந்த கட்டடம்.

இந்த கட்டடத்தின் பெயரும் தமிழரை அடையாளப்படுத்தும் விதமாக உழவர் சந்தை என பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையிலும், முக்கிய நிகழ்வுகளை கொண்டாடும் இடமாகவும் இந்த கட்டத்தை பயன்படுத்தலாம்.

இந்த கட்டுமான நடவடிக்கைளை மணீஷ் நிர்வகித்து வருகிறார். புயல் வௌ்ளத்தில் பாதுகாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதி, உயர்தருமான கட்டுமான பொருட்களை கொண்டு இந்த கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில், சிறப்பான யுத்திகளை கையாண்டு கட்டப்பட்ட இந்த கட்டத்தின் மணிஷின் முயற்சிக்கு அமெரிக்க மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: இவரைக் குறித்து தகவல் தந்தால் ரூ.37 கோடி பரிசு- அமெரிக்கா

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter