திருமண பரிசாக கணவனுக்கு படகை வழங்கிய இளம்பெண்!

groom

திருமணத்தின்போது மணமகனும் மணமகளும் பரஸ்பரம் பரிசுகள் வழங்கிக்கொள்வது சகஜம்தான். சிலர் மோதிரம் அன்பளிப்பாக வழங்குவர், மேலும் சிலர் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்குவர்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு பெண் யாரும் எதிர்பாரத விதமாக விலையுயர்ந்த ஆடம்பர படகை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.

புளோரிடாவில் வசிக்கும் ஜனீன் சொலெர் மற்றும் ட்ரெடெரிக் க்ரே என்பவருக்கும் மியாமியில் கடந்த 7 ஆம் தேதி திருமணம் நடந்தது.

Groom

அப்போது திருமண மேடையில் ஜனீன், எனக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கையை திருமண பரிசாக என் கணவர் வழங்கியுள்ளார்.

எனவே என் கணவரிடம் இல்லாத ஒரு பொருளை பரிசாக வழங்க வேண்டும் என நினைத்தேன். அதனால் வித்தியாசமாக ஆடம்பர படகு ஒன்றை பரிசாக வழங்க விரும்பினேன்.

கடலில் நின்றுக்கொண்டிருந்த படகை பார்த்து இதுதான் உங்களுக்கான பரிசு என மணமகள் சொன்னதும் மணமகன் மட்டுமல்லாது அங்கு திரண்டிருந்த அனைத்து விருந்தினர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அதன்பின் இருவரும் ஜோதியாக அந்த படகில் பயணம் மேற்கொண்டனர்.