அமெரிக்க வரலாறு மாற்றி அமைக்கப்படும்: கமலா ஹாரிஸ்

kamala harris

ஜனவரி 20 ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம் என துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலாஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அதன் மூலம் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமின்றி கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமான துளசேந்திரபுரம் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 2020 ஆம் ஆண்டு மிகவும் துயரமாக ஆண்டாக அமைந்தடு. கொரோனா தாக்கம், காட்டுத்தீ, சூறாவளி முதல் இனபாகுபாடு வரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி, வேதனையை சந்தித்தனர். ஆனால் தற்போது அமெரிக்கா, முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

கொரோனா காரணமாக பக்கத்து வீட்டுக்காரருக்கு மளிகை சாமான்கள் வாங்கிக்கொடுக்கவே சக மனிதர்கள் பயந்துகொண்டிருக்கும் சூழலில், கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது துணிவாக பணி செய்த களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டுக்கள்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாய கட்சி தைரியமாக சந்திக்கும். புதிய அத்தியாயமாக மாற்றுவோம். நம்பிக்கையுடன் இந்த ஆண்டை தொடங்குவோம். சரித்திரத்தை மாற்றி அமைப்போம்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:ஒரே நாளில் 3,927 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter