ட்ரம்பின் ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தேவை: மைக் பென்ஸ்

Mike Pence

அமெரிக்கா தற்போது இருக்கும் சூழலுக்கு ட்ரம்பின் ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தேவை என குடியரசுக் கட்சி சார்பின் துணை அதிபராக போட்டியிடும் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

Mike Pence

மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார். கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரசாரங்களில் பேசிய மைக் பென்ஸ், “அமெரிக்கா தற்போது எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ட்ரம்பின் ஆட்சி தேவை. ஜோ பிடன் கையில் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அமெரிக்கா சிறந்த நாடாக மாற ட்ரம்ப் சிறந்த நோக்கங்களை கொண்டிருந்ததால் 4 ஆண்டுகளுக்கு முன்பும் நான் ட்ரம்புக்கு ஆதரவாகவே பேசினேன். ஜனநாயக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனாவுக்கு அமெரிக்கா சொந்தமாகிவிடும், அமெரிக்க வேலைவாய்ப்புகள் சீனாவின் கைக்கு சென்றுவிடும்” என தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் காவல்துறையினர் தாக்குதலால் 751 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa