சத்குருவுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்திப்பு!

sathguru

அமெரிக்க பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு 15 மாகாணங்களுக்கு மோட்டார் சைக்கிளில் செப்.15 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார். ‘Of Motorcycles and a Mystic’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா அறிவியல் மையத்தில் இருந்து புறப்பட்ட, அவர், லேண்ட்ஸ், கொமான்ச்சி, மிஸிஸிபி, இல்லினாய்ஸ், மிசவ்ரி, நியூ மெக்ஸிகோ, கொலோரடோ உள்ளிட்ட மாகாணங்களுக்கு பயணித்துவருகிறார். அமெரிக்க பூர்வ இனக்குழுக்களின் உள்ளுணர்வுகளை பற்றியும், தனித்துவமான கலாசாரத்தையும் அறிந்துகொள்ளவே இந்த பயணம் என சத்குரு தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் 45 லட்சம் பேர் அமெரிக்க மற்றும் அலாஸ்கா பூர்வகுடியின மக்களாக உள்ளனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 1.5 சதவீதம் ஆகும்.‘Sadhguru App’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சத்குருவின் பயணம் குறித்து அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This image has an empty alt attribute; its file name is sathguru4-1024x682.jpg

இந்நிலையில் அமெரிக்கா வந்திருந்த சத்குருவை, நடிகரும் அமெரிக்க ராப் இசை பாடகருமான வில் ஸ்மித் சந்தித்து உரையாடியுள்ளார். 1990 ஆம் ஆண்டு ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து திரையுலகிற்குள் நுழைந்த வில் ஸ்மித், 1995ல் வெளிவந்த பாட் பாய்ஸ், 1996ல் வெளிவந்த இன்டிபென்டென்ஸ் டே, மென் இன் பிளாக், ஐ, ரோபாட், த பர்சூட் அஃப் ஹாப்பினெஸ், ஹான்காக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியை அடைந்தார்.

வில் ஸ்மித் உடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்குரு , “வில் ஸ்மித், உங்களுடனும் உங்கள் அற்புதமான குடும்பத்துடனும் நேரம் செலவழித்தது மகிழ்ச்சி. உங்கள் சமூகம் உறுதியாக இருக்கட்டும். தர்மம் உங்கள் வழிகாட்டியாக இருக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே:  நவராத்திரி விழா: ஜோ பிடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts