அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 90,000 பேருக்கு கொரோனா! 2 மடங்கான உயிர் பலி…

Coronavirus

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

coronavirus

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,34,218 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரேநாளில் 91,295 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை 9 லட்சத்து 21 ஆயிரத்து 6316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 1,021 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மூன்று நாளைக்கு முந்தைய நிலவரப்படி தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் 5.5% உயர்த்தப்பட்டுள்ளன.

கனக்டிகட், மிசிகன், நியூ ஜெர்சி, ஒஹியோ உள்ளிட்ட 7 மாகாணங்களில் உயிரிழப்புகள் 2 மடங்காகியுள்ளன. மேலும் புளோரிடா, டெக்சாஸ், கலிபோர்னியாவில் இதை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதாவது கடந்த 2 வாரங்களில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 36 மாகாணங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களே தொற்று பரவ காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பா நாடுகளிலும்  கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: பிடன் மீதான ஊழல்களை ஊடகங்கள் மறைக்கின்றன- ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter