இந்தியாவிலுள்ள மருத்துவமனைக்கு நிதியுதவி வழங்கிய அமெரிக்கவாழ் தமிழர்

Doctor

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2கோடியை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாபரவல் பாதிப்பால் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது.

இதனால் இந்தியாவே நிலைகுலைந்து போய் உள்ளது. பல்வேறு உலக நாடுகளும் கொரோனாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றன.

இதனால், பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா செல்ல தடை விதித்துள்ளன.

GOVERNMENT HOSPITAL - COIMBATORE Reviews, Medical Clinic, GOVERNMENT  HOSPITAL - COIMBATORE Medical Center, Health Clinic, Equipments

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தமிழர், ஒருவர் கோவை அரசு மருத்துமனைகளுக்கு வெறும் 48 மணி நேரத்தில் 1 கோடி நிதி திரட்டி ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் ரங்கசாமி, 1992 ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவில் குடியேறியுள்ள இவர், ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவருகிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவிவருவதைவும், ஆக்சிஜன் பற்றாக்குறையையும் அறிந்த ராஜேஷ் ரங்கசாமி, நண்பர்களிடம் வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் தொடர்பு கொண்ட மருத்துவர், தனது மனைவியின் ஆர்டர் அறக்கட்டளை மூலம் நிதி திரட்டினார். இவரின் முயற்சிக்கு 48 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய் நிதி கிடைத்தது. இதில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் செறிவூட்டி கருவிகளை வாங்கிக்கொடுத்துள்ளார்.