இந்தியாவுக்கு ஆதரவு தரும் அமெரிக்கர்கள்!

அமெரிக்க மக்களில் பெரும்பாலோர் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய ஆதரவு மன நிலையில் உள்ளது ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இரு நாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சீனாவின் மோதல் போக்கை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் லோயி இன்ஸ்டியூட் என்ற நிறுவனம் அமெரிக்காவில் இம்மாத தொடக்கத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ராணுவ ரீதியிலான மோதல் வரும் போது யாருக்கு அமெரிக்க அரசு ஆதரவு தர வேண்டும் என கருதுகிறீர்கள் என கேட்கப்பட்டது. இதில் 32.6% பேர் இந்தியாவுக்கும் 3.8% பேர் சீனாவுக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொருளாதார மோதல் வரும் போது இந்தியாவுக்கு தங்கள் நாடு ஆதரவு தர வேண்டும் என 36.3% அமெரிக்கர்களும் சீனாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் 3.1% பேரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்கலாமே: டிக்டாக் நிறுவனத்தை வாங்குகிறதா மைக்ரோ சாப்ட்?