அமெரிக்காவில் கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை!

baby

அமெரிக்காவில் கொரோனாவை இயற்கையாகவே எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியோடு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் மீண்ட நிலையில், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

இதனிடையே மே மாதத்துக்குள் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் கொரோனா மருந்து கிடைத்துவிடும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

North Florida RN for baby | North Florida Baby Nurse | United States

இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் கர்ப்பமாக இருந்தார்.

பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார்.

தற்போது அந்தப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் உடலில் கொரோனாவை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளதாக அட்லாண்டிக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனாவை எதிர்க்கும் சக்தியோடு பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை அது பெருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்புசக்தி தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து குழந்தைக்கு சென்றுள்ளது.

ஆனால் குழந்தைக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும், எந்தளவு பாதுகாப்பாக இருக்கும் என தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.