அமெரிக்காவை இந்திய வம்சாவளியினரே வழிநடத்துகின்றனர்: பைடன்

Joe Biden

அமெரிக்காவில் உயர் பதவிகளில் அமர்ந்து, அமெரிக்காவை, இந்திய வம்சாவளியினர் தான் வழிநடத்தி வருகின்றனர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவியேற்றார். அதிபராகி, 45 நாட்களில் 55 உயர் பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினரை நியமித்து அழகு பார்த்தார்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்

Indian Americans in Biden administration

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.

அமெரிக்க சுகாதார துறையில் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விவேக் மூர்த்தி, அதிபரின் மனைவி ஜில் பைடனின் கொள்கைக் குழு இயக்குநர் மாலா அஹிடா உள்ளிட்டோர் உயர் பதவியில் உள்ளனர்.

நாசாவின் ‘பெர்சிவரன்ஸ் ரோவர்’ விண்கலம், கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியது.

இந்த விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் செயல்பட்டார்.

இந்நிலையில், செவ்வாயில் விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு நாசா சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன் கலந்துகொண்டர்.

நிகழ்ச்சியில் பேசிய பைடன், ”உயர் பதவிகளில் அமர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள்தான் நாட்டை வழிநடத்துகின்றனர்.

ஸ்வாதி மோகன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், எனக்கு உரை எழுதி தரும் வினய் ரெட்டி உட்பட அனைவரும் சிறப்பாக செயல்படுகின்றனர்.

அமெரிக்காவுக்கு சேவை செய்யும் இந்திய அமெரிக்கர்களின் மனப்பான்மையை நான் பாராட்டுகிறேன்” என புகழ் பாடினர்.