ஜோ பிடன் ஒரு முட்டாள்; கமலா ஹாரிஸ் திறமையற்றவர்- அதிபர் ட்ரம்ப்

குடியரசு கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஒரு முட்டாள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

kamala harris

2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் உள்ளனர். அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி, அமெரிக்க மக்கள் தெகையில், ஒரு சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்துக்கள். இவர்களின் வாக்குகளை கவர குடியரசு மற்றும் ஜனநாய கட்சியினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அதே சமயம் கமலா ஹாரிஸூம், ஜோ பிடனும் சீன ஆதரவாளர்கள் என ட்ரம்ப் அடிக்கடி கூறிவருகிறார். அதேபோல் கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டுபிடித்து விடும் என அதிபர் ட்ரம்ப் கூறுவதில் நம்பிக்கை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துவருகிறார்.

Joe biden

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பிடனும், கமலா ஹாரிஸூம் வதந்தி பரப்புவதாகவும் இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார். உலகளவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிறந்து விளங்குவதாக கூறிய ட்ரம்ப், ஜோ பிடன் ஒரு முட்டாள் என்றும் கமலா ஹாரிஸ் திறமையற்றவர் என்றும் விமர்சித்தார்.

இதையும் படிக்கலாமே: மயக்கமடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய சிறுவன்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa