கிறிஸ்துமஸ்க்குள் விடிவுகாலம்- பைடன்

Joe Biden

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

Joe Biden

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அனைத்து நாட்டு மக்களும் இந்த தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், “அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும். ஜூலை மாதத்துக்குள் 60 கோடி அளவுக்கு தடுப்புகள் போடப்படும்.

ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு தேவையான மற்றும் போதுமான அளவிற்கு டோஸ்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை மக்கள் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப வேண்டுமென விரும்புகின்றனர். அமெரிக்காவில் கிறிஸ்துமஸ்க்குள் இயல்பு நிலை திரும்பிவிடும்” என நம்பிக்கை தெரிவித்தார்.