கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் பைடன்

Joe biden

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,50,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறைத் தரவுகள் கூறுகின்றன.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த வார இறுதிக்குள் ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து 2.9 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற இலக்கு கொண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும் அவரின் மனைவி கேரனும் நாளை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது.

இதேபோல் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடன் அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைசர் தடுப்பூசி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்வதற்காகவே பைடப் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பதாக ஆட்சி மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: மாடர்னா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி 94% பலன்.!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter