313 பேரக்குழந்தைகளுடன் வசித்த மூதாட்டி உயிரிழப்பு!

Hester Ford

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வசித்துவந்த 116 வயது மூதாட்டி காலமானார்.

சார்லோட்டில் வசித்துவந்த ஹெஸ்டர் ஃபோர்டு (Hester Ford). இவர் அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

1904 ஆம் ஆண்டு பிறந்த ஹெஸ்டர் ஃபோர்டு, தனது 14 வயதில் ஜான் ஃபோர்டு என்பவரை திருமணமானம் செய்துகொண்டார். ஜான் ஃபோர்டு, 1963 ஆம் ஆண்டு, அதாவது அவரது 57 வயதில் உயிரிழந்தார்.

ஹெஸ்டர் ஃபோர்டுக்கு 14 குழந்தைகளும், 68 பேரக்குழந்தைகளும், 125 கொள்ளுப் பேரக்குழந்தைகளும், 120க்கும் மேற்பட்ட எள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில் ஹெஸ்டர் ஃபோர்டும் வயது முதிர்வால் கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளார்.

Charlotte woman, who was oldest living American and had 125 great- grandchildren, has died - Report Door

தனது பாட்டியின் மறைவு குறித்து வருத்தத்துடன் கூறிய ஹெஸ்டர் ஃபோர்டின் பேத்தி தனீஷா பேட்டர்சன், “பாட்டி எங்கள் குடும்பத்திற்கு ஒரு தூணாக இருந்தார், எங்களுக்கு அனைவருக்கும் தேவையான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலை வழங்கினார்” எனக் கூறினார்.

ஹெஸ்டர் பிரிட்டனிலுள்ள லான்காஸ்டர் கவுண்டியில் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு 15 வயதில் முதல் குழந்தை பிறந்தது.

ஹெஸ்டர் இறக்கும் வரை எந்தவொரு பிரச்னைக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இல்லை. குடும்ப உறுப்பினர்களுடன் இறக்கும் வரையில் வாழ்ந்துவந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  15 ஆம் தேதி தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஹெஸ்டர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவரது குடும்ப உறுப்பினர் ஹெஸ்டரை நன்கு பராமரித்துக்கொண்டனர். தற்போது இவர் இறந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.