ட்ரக்குகளில் பாதுகாக்கப்படும் கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள்!

நியூயார்க்கில் போன ஆண்டு கொரோனாவால் காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்கள், குளிர்சாதன டிரக்குகளில் தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

Coronavirus in N.Y.: Toll Soars to Nearly 3,000 as State Pleads for Aid - The New York Times

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நியூயார்க் சிட்டி போலீசார். “கடந்த ஆண்டு கொரோனாவால் பலியான 750 பேரின் உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் விரைவில் இந்த எண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி வருகிறோம். இறந்தவர்களின் உடல்கள் ஹார்ட் தீவுப் பகுதியில் புதைக்கப்பட குடும்பத்தினர் விரும்பினால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவ வல்லுநர்கள், “கொரோனா நோயாளிகளின் உடல்களை இவ்வாறு வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. உடனடியாக அந்த உடல்களை புதைக்கவோ எரிக்கவோ வேண்டும்” என அறிவுறுத்தினர்.