அமெரிக்காவில் பிரபலமாகும் பசு கட்டிப்பிடி வைத்தியம்

Cow-hugging

அமெரிக்காவில் கொரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க பசுக்களை கட்டி தழுவும் சிகிச்சைமுறை பிரபலமாகிவருகிறது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி திட்டத்தால் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இருப்பினும் கொரோனாவால் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் இன்னும் அந்த சோகத்திலிருந்து மீளவில்லை.

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் பிரபலமான பசுவை கட்டிப்பிடித்து ஆறுதல் அடைந்துகொள்ளும் சிகிச்சை, தற்போது அமெரிக்காவிலும் பிரபலமாகிவருகிறது. மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க பசுக்களை கட்டிபிடிக்கின்றனர். அதன்படி ஒரு மணிநேரம் பசுவை கட்டிப்பிடிக்க ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

பசுக்களை கட்டிபிடிப்பதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள் உருவாவதுடன், உடலில் ஆக்ஸிடாஸின் அதிகமாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அல்லது பசுவின் முதுகில் தடவிக்கொடுக்கின்றனர்.

இந்த பசு தெரபி முதுகுவலி, ரத்த அழுத்தம், இதய பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு தீர்வாக அமைகிறது.

இந்தியாவிலோ பசுக்களின் சிறுநீரையும், சாணத்தையும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு கூட்டம் எடுத்துக்கொள்வது போல அமெரிக்காவில் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை பலரும் நம்புகின்றனர்.