கொரோனா வைரஸை கொல்லும் எல்இடி விளக்குகள்!

coronavirus

புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் மூலம் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தொடர்பான அறிக்கை, “Photochemistry and Photobiology B: Biology” என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கொல்வது மிகவும் எளிது என்பதை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலிவாக மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கொன்றதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த வகை விளக்குகள் குறைந்த அளவிலான சக்தியை நுகர்வதும், வழக்கமான விளக்குகளைப் போல பாதரசத்தை கொண்டவை அல்ல என்பதும் சாதகமான அம்சங்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

UV-LED technology can kill Covid-19: Study - The Hindu BusinessLine

அதில், கொரோனா வைரஸ்களின் குடும்பத்திலிருந்து ஒரு வைரஸில் வெவ்வேறு அலை நீளங்களில் கிருமிநாசினியின் செயல் திறனை புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் மூலம் மதிப்பிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதற்கான தொழில்நுட்பத்தை ஏர் கண்டிஷனர்கள் மற்றும் நீர் அமைப்புகளில் நிறுவி வலிமையாக, விரைவாக, குறைந்த செலவில் இக்கிருமியைக் கொல்ல முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்இடி பல்புகளை அடிப்படையாகக் கொண்ட கிருமி நாசினி அமைப்புகளை, காற்றோட்ட அமைப்பு மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் பொருத்தி, உறிஞ்சப்பட்ட காற்றிலிருந்து கிருமியை நீக்கி அறைக்குள் அனுப்பலாம் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.

தேவையான மாற்றங்களுடன் எல்.இ.டி விளக்குகளை ஏர் கண்டிஷனர் மற்றும் நீர் அமைப்புகளில் நிறுவ முடியும் என்றும், இதன் மூலம் பெரிய மேற்பரப்புகளையும் இடங்களையும் திறம்பட கிருமி நீக்கம் செய்திட முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு நபர் நேரடியாக வெளிச்சத்திற்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் வீடுகளுக்குள் இருக்கும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய புற ஊதா எல்இடி விளக்குகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter